/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.டி.ஏ.டி., டால்பின் அகாடமி மாநில சீனியர் நீச்சலில் சாதனை
/
எஸ்.டி.ஏ.டி., டால்பின் அகாடமி மாநில சீனியர் நீச்சலில் சாதனை
எஸ்.டி.ஏ.டி., டால்பின் அகாடமி மாநில சீனியர் நீச்சலில் சாதனை
எஸ்.டி.ஏ.டி., டால்பின் அகாடமி மாநில சீனியர் நீச்சலில் சாதனை
ADDED : ஜூன் 11, 2025 12:52 AM

சென்னை, தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில், 79வது மாநில சீனியர் நீச்சல் மற்றும் டைவிங் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல்குள வளாகத்தில் கடந்த மூன்று நாட்கள் நடந்தன.
போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், முகப்பேர் எஸ்.டி.ஏ.டி., டால்பின் அகாடமியின் அணி, மூன்று புதிய சாதனை மற்றும் சாம்பியன் பட்டங்களையும் படைத்து அசத்தியது.
அணியின் வீரர் யதேஷ் பாபு, 50 மீட்டர், மார்பக ஸ்ட்ரோக்கில் பிரிவில், 28.51 வினாடியில் கடந்து புதிய சாதனை படைத்து, அவரது சாதனையை அவரே முறியடித்தார். இதற்கு முன், 2024ல், யாதேஷ் பாபு, 29.6 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.
அதேபோல், யாதேஷ் பாபு, 100 மீ., பிரிவிலும், 1:03.39 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார். இதற்குமுன், 2024ல் சென்னை எஸ்.டி.ஏ.டி., வீரர் தனுஷ், 1:03.61 நிமிடத்தில் முடிந்ததே சாதனையாக இருந்து வந்தது.
அதே அகாடமியின் அணி, 4*100 மெட்லே ரிலே பிரிவில், 4:4.69 நிமிடத்தில் கடந்து புதிய சாதனையையும் படைத்தது. முன்னதாக, 2019ல் டி.எஸ்.பி.ஏ., அணி, 4:05.45 நிமிடத்தில் கடந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பெண்கள் அணி பிரிவில், 103 புள்ளிகளில் முதலிடத்தையும், ஒட்டுமொத்த போட்டியில், 196 புள்ளிகளில் இரண்டாமிடத்தையும் தட்டிச் சென்றது.