/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.41.83 கோடியில் ஏழு முடிவுற்ற பணிகளை திறந்தார் ஸ்டாலின்
/
ரூ.41.83 கோடியில் ஏழு முடிவுற்ற பணிகளை திறந்தார் ஸ்டாலின்
ரூ.41.83 கோடியில் ஏழு முடிவுற்ற பணிகளை திறந்தார் ஸ்டாலின்
ரூ.41.83 கோடியில் ஏழு முடிவுற்ற பணிகளை திறந்தார் ஸ்டாலின்
ADDED : செப் 26, 2025 11:47 PM

ஷெனாய் நகர், ஷெனாய் நகரில், சர்வதேச வசதியில் பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டு மைதானம் உட்பட கோயம்பேடு, ராமாபுரம், வேளச்சேரி உள்ளிட்ட ஏழு இடங்களில், 41.83 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அமைந்தகரை அடுத்த ஷெனாய் நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 10.56 கோடி ரூபாயில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சர்வதேச தரத்திலான, பாவேந்தர் பாரதிதாசன் பெயரில் விளையாட்டு மைதானம் அமைக்கப் பட்டது.
இம்மைதானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை நேரடியாக பங்கேற்று திறந்து வைத்து, வாலிபால், கால்பந்து வீரர்களுடன் கலந்துரையாடினார். 'கேலரி'யுடன் அமைக்கப்பட்ட அரங்கத்தில் மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து, 10.27 கோடியில் கோயம்பேடு சந்திப்பில் பசுமை பூங்கா, ராமாபுரத்தில் 7.32 கோடியில் திறந்தவெளி பூங்கா, பம்மல் ஈஸ்வரி நகரில் 4.91 கோடியில் விளையாட்டு மைதானத்தையும் பயன்பாட்டிற்கு திறந்தார்.
அதேபோல் வேளச்சேரி மேம்பாலம் அழகுபடுத்தும் பணி, முடிச்சூர் ரங்கா நகர் குளத்தை மேம்படுத்துதல், நங்கநல்லுாரில் உள்ள தங்க சாலையில் முதல்வர் படைப்பகம் உள்ளிட்ட மொத்தம் 41.83 கோடி ரூபாய் செலவில் ஏழு முடிவற்ற பணிகளை திறந்து வைத்தார்.
பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் வசித்துவந்த நுங்கம்பாக்கம் கல்லுாரி பாதைக்கு ஜெய்சங்கர் சாலை; நாடக நடிகரும், நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தையுமான எஸ்.வி.வெங்கட்ராமன் வசித்த மந்தைவெளி 5வது குறுக்கு தெருவிற்கு, எஸ்.வி.வெங்கட்ராமன் தெரு என பெயர் மாற்றப்பட்டது.
இந்த இரு தெருக்களுக்கும் புதிய வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது. இவற்றை தலைமை செயலகத்தில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் ஸ்டாலின் நேற் று திறந்து வைத்தார்.
கூவம் ஆற்றில் மதுரவாயல் - நொளம்பூரை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலமும், நேற்று திறக்கப்பட்டது.