/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
13 இடத்தில் முதல்வர் படிப்பகம் அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்
/
13 இடத்தில் முதல்வர் படிப்பகம் அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்
13 இடத்தில் முதல்வர் படிப்பகம் அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்
13 இடத்தில் முதல்வர் படிப்பகம் அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்
ADDED : ஆக 02, 2025 12:14 AM
சென்னை,சென்னையில் 13 இடங்களில், 31 கோடி ரூபாய் மதிப்பில், படிப்பகம் அமைக்கும் பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பெரும்பாக்கம் பூங்காவில், 6.94 கோடி ரூபாயில், இறகுபந்து அரங்கம், கால்பந்து மைதானம், யோகா தளம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. வில்லிவாக்கம், பாடி, வடபழனி மேம்பாலங்களின் கீழ், திறந்தவெளி அரங்கம், நீரூற்று, அலங்கார விளக்குகள் போன்ற வசதிகள், 11.50 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பணிகள் முடிவடைந்ததை அடுத்து, இவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அத்துடன், பூண்டி நீர்தேக்கத்தில், 3.58 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, உணவக கட்டடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
அயனாவரம், கொளத்துார் - ஜவஹர் நகர், எழும்பூர் - ராட்டிலர் தெரு, துறைமுகம் - சண்முகம் சாலை உட்பட 13 இடங்களில், 31 கோடி ரூபாயில் முதல்வர் படிப்பகம் அமைக்கப்பட உள்ளது.
கோயம்பேடில், 32.6 கோடி ரூபாயில், தமிழக கலாசார பொருட்கள் விற்பனைக்கான கைவண்ண சதுக்கம் அமைக்கப்பட உள்ளது. மெரினா கடற்கரை சாலை, 8.40 கோடி ரூபாயில், நடைபாதைகளுடன் அழகுப்படுத்தப்பட உள்ளது. இவை உட்பட, 91.40 கோடி ரூபாயிலான, 26 திட்டப் பணிகளுக்கு தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார்.

