ADDED : ஜூலை 23, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டிவாக்கம்,கொட்டிவாக்கத்தில், நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கிய 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், மாநகராட்சி மேயர் பிரியா, தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் பங்கேற்றனர்.
இதில், 15 துறைகளின், 45 சேவைகளை பெற, ஏராளமானோர் அளித்த 1,940 மனுக்களில், 14 மனுக்களுக்கு உடனடி தீர்வு எட்டப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை கோரி, 1,012 மனுக்களும், இதர சேவைகள் கோரி 914 மனுக்களும் பெறப்பட்டன.
ஒட்டியம்பாக்கத்தில் நடந்த முகாமில், 708 மனுக்கள் வரப்பெற்றன.