/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பின்டெக் சிட்டியில்' நட்சத்திர ஹோட்டல்
/
'பின்டெக் சிட்டியில்' நட்சத்திர ஹோட்டல்
ADDED : ஜூலை 11, 2025 12:17 AM
சென்னை சென்னை, 'பின்டெக் சிட்டி' எனப்படும் நிதிநுட்ப நகரில், நட்சத்திர ஹோட்டல் அமைப்பது தொடர்பாக தமிழக அரசின், 'டிட்கோ' அதிகாரிகள், நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்தியுள்ளனர்.
நம் நாட்டின் பன்னாட்டு நிதி நிறுவனங்கள், வங்கிகள், நிதிச்சேவை நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் அலுவலகம், கிளைகளை அமைக்க, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில், நிதிநுட்ப நகரை அமைக்கிறது.
மொத்தம், 110 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள இந்நகரில், 225 கோடி ரூபாய் செலவில், 'பின்டெக் டவர்' கட்டப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக, 56 ஏக்கரில், 83 கோடி ரூபாய் செலவில் நிதிநுட்ப நகரம் அமைக்கும் பணி நடக்கிறது. அங்குள்ள மனைகள் ஏல, 'டெண்டர்' முறையில், 99 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டு வருகிறது.
இங்கு, 4.20 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் கூடிய நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான கட்டுமானம், தேவைப்படும் வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக, 'டிட்கோ' அதிகாரிகள், நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தினர், கட்டுமான நிறுவனத்தினர் உள்ளிட்டோருடன் பேச்சு நடத்தியுள்ளனர்.