/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில பால் பேட்மின்டன் கத்திவாக்கம் பள்ளி தகுதி
/
மாநில பால் பேட்மின்டன் கத்திவாக்கம் பள்ளி தகுதி
ADDED : நவ 22, 2024 12:31 AM

சென்னை,
மாவட்ட அளவிலான பால் பேட்மின்டன் போட்டியில், திருவொற்றியூர் கத்திவாக்கம் அரசு பள்ளி வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தேர்வாகிஉள்ளது.
அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், வடசென்னை மற்றும் தென் சென்னை அளவிலான பால் பேட்மின்டன் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில் வெற்றிபெற்ற அணிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான போட்டிகள், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா ஹிந்து மேல்நிலை பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் துவங்கியது.
போட்டியில், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் என, மூன்று பிரிவுகளில் இருபாலருக்கும் நடக்கின்றது.
முன்னதாக நடந்த வடசென்னை, தென்சென்னை அளவில் வெற்றி பெற்று, இருபாலரிலும் தலா ஒரு அணிகள் என, மொத்தம் 12 அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மாணவருக்கான 19 வயது பிரிவில், திருவொற்றியூர் கத்திவாக்கம் அரசு பள்ளி முதலிடம் பிடித்தது. இந்த வெற்றியால், மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
மாணவருக்கான 14, 17 வயதினருக்கான போட்டிகள் வரும் நாட்களில் நடக்க உள்ளன.
மாணவியருக்கான 14 வயது பிரிவில், லேடி சிவசாமி பள்ளி வெற்றி பெற்று முதலிடத்தையும், கத்திவாக்கம் அரசு பள்ளி இரண்டாம் இடத்தையும், சேதுபாஸ்கார பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
அதேபோல், 17 வயது பிரிவில், அண்ணா நகர் ஜெசி மோசஸ் பள்ளி, சேது பாஸ்கரா, புலியூர் அசோக் நகர் அரசு பள்ளி அணிகள் முறையே, முதல் மூன்று இடங்களை கைப்பற்றின.
தொடர்ந்து, 19 வயது பிரிவில், சேதுபாஸ்கரா பள்ளி முதலிடமும், செயின்ட் ரபேல்ஸ் இரண்டாமிடமும், அசோக் நகர் அரசு பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்றன. போட்டியில், முதலிடத்தை பிடித்த பள்ளிகள் மட்டும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.