/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில கூடைப்பந்து போட்டி 104 அணிகள் பலப்பரீட்சை
/
மாநில கூடைப்பந்து போட்டி 104 அணிகள் பலப்பரீட்சை
ADDED : ஏப் 23, 2025 12:12 AM
சென்னை, மயிலாப்பூரில் உள்ள ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், 19ம் ஆண்டிற்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, சென்னையில் நேற்று மாலை துவங்கியது.
போட்டிகள், நேற்று முதல் 26ம் தேதி வரை, பெரியமேடு, நேரு விளையாட்டு மைதானத்திலும், 27 - 30ம் தேதி வரை தி.நகர், வெங்கட்நாராயணா தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மைதானத்திலும் நடக்கின்றன.
இதில், ஐ.சி.எப்., - இந்தியன் வங்கி, வருமான வரி, ரைசிங் ஸ்டார் உட்பட, ஆண்களில் 72, பெண்களில் 32 என, மொத்தம் 104 அணிகள் பங்கேற்றுள்ளன.
அரையிறுதிக்கு முந்தைய சுற்று வரை, 'நாக் அவுட்' முறையிலும், அரையிறுதியில் இருந்து, 'லீக்' முறையிலும் போட்டிகள் நடக்கின்றன.
முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு, 40,000, 30,000 மற்றும் 20,000 ரூபாய் முறையே வழங்கப்பட உள்ளன.