/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சிறுவர்கள் தடகளம்: செயின்ட் ஜோசப் பள்ளி அசத்தல்
/
மாநில சிறுவர்கள் தடகளம்: செயின்ட் ஜோசப் பள்ளி அசத்தல்
மாநில சிறுவர்கள் தடகளம்: செயின்ட் ஜோசப் பள்ளி அசத்தல்
மாநில சிறுவர்கள் தடகளம்: செயின்ட் ஜோசப் பள்ளி அசத்தல்
ADDED : டிச 12, 2024 12:19 AM

சென்னை,சிறுவர்களுக்கான மாநில தடகளப் போட்டியில், செம்மஞ்மேரி செயின்ட் ஜோசப் கார்டன் பள்ளி, 13 தங்கம் உட்பட 40 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது.
மத்திய அரசின், 'பிட் இந்தியா' அமைப்பின் ஆதரவில், பியூச்சர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், மாநில அளவிலான சிறுவர்கள் தடகளப் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது.
போட்டியில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட பள்ளியில் இருந்து, 500 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், 25, 40, 50 மீ., குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.
போட்டியில் பங்கேற்ற, செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் கார்டன் பள்ளியின் எல்.கே.ஜி., மாணவர்கள் இறையருள், ஆராதானா, யூ.கே.ஜி., மாணவர் விஷ்ருத், கிரேடு - 2 மாணவியர் ரேயன் ஷெரி, தன்விகா ஆகியோர், தனிநபர் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.
தவிர, செயின்ட் ஜோசப் கார்டன் பள்ளி மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, 13 தங்கம், 17 வெள்ளி, 10 வெண்கலம் என, மொத்தம், 40 பதக்கங்களை வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களை, பள்ளியின் தலைவர் பாபு மனோகரன் பாராட்டினார்.

