/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சதுரங்க போட்டி சிறுவர், சிறுமியர் அசத்தல்
/
மாநில சதுரங்க போட்டி சிறுவர், சிறுமியர் அசத்தல்
ADDED : அக் 30, 2024 07:33 PM
சென்னை:வண்டலுாரில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில், சென்னை, செங்கை சிறுவர், சிறுமியர் முதலிடங்களை பிடித்தனர்.
'பிட் ஜீ' குளோபல் பள்ளி மற்றும் ஆர்.வி., செஸ் அகாடமி சார்பில், மாநில அளவிலான செஸ் போட்டி, வண்டலுாரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்தது. பல்வேறு பிரிவுகளில், 8, 11, 14, 17 வயதுக்குட்பட்ட இருபாலருக்கும், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட, மாநிலத்தின் மாவட்டங்களில் இருந்து, 319 சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். அவர்களுடன், 29 சர்வதேச ரேட்டிங் வீரர்களும் பங்கேற்றனர்.
அனைத்து சுற்றுகள் முடிவில், 8 வயது பிரிவில், சோலையூர் ஆல்வின் பள்ளியின் அனிஷ்; சிறுமியர் பிரிவில் மேடவாக்கம் வேலம்மாள் பள்ளி மாணவி சியனா ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர்.
அதேபோல், 11 வயதில் சிறுவரில் பள்ளிக்கரணை சான் அகாடமியின் சாய்சரன்; சிறுமியரில் செங்கல்பட்டு விகாஷ் மந்திரா பள்ளியின் சுருதிகா; 14 வயதில் அம்பத்துார் ஜி.கே., செட்டி பள்ளியின் சரத், தாம்பரம் கிரேஸ் பள்ளியின் லீனா ஹாசினி ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர்.
தொடர்ந்து, 17 வயதுக்கு உட்பட சிறுவர் பிரிவில், காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் பள்ளியின் ஹரிஹரன், கேளம்பாக்கம் நேஷ்னல் பப்ளிக் பள்ளியின் அத்விகா சதீஷ் ஆகியோர் முதலிடம் பிடித்து அசத்தினர்.