/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில கால்பந்து இறுதிப்போட்டி கோவை - மதுரை பள்ளிகள் தகுதி
/
மாநில கால்பந்து இறுதிப்போட்டி கோவை - மதுரை பள்ளிகள் தகுதி
மாநில கால்பந்து இறுதிப்போட்டி கோவை - மதுரை பள்ளிகள் தகுதி
மாநில கால்பந்து இறுதிப்போட்டி கோவை - மதுரை பள்ளிகள் தகுதி
ADDED : நவ 16, 2025 02:21 AM
சென்னை: மாநில கால்பந்து இறுதிப்போட்டிக்கு, கோவை - மதுரை பள்ளி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான 'சேலஞ்சர் கோப்பை' கால்பந்து போட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்கிறது.
டாக்டர் சேவியர் பிரிட்டோ குழுமம், சென்னை மற்றும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் இணைந்து நடத்தும் இப்போட்டியில், 12 மாவட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன.
முதல் அரையிறுதி போட்டியில் மதுரை பள்ளி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில், திண்டுக்கல் பள்ளி அணியை வீழ்த்தியது. மதுரை அணி சார்பில் அஸ்வின், கார்த்திக் ரோஷன், ஐசக் ஜோசப் தலா ஒரு கோல் அடித்தனர். அடுத்த போட்டியில், கோவை பள்ளி அணி, சேலம் பள்ளி அணியை எதிர்த்து மோதியது.
இதில் கோவை அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் சேலம் அணியை வீழ்த்தியது. கோவை அணி சார்பில் வாட்சன் 2, நித்திஷ் 1 கோல் அடித்து அசத்தினர்.
புள்ளி பட்டியலில் பின்தங்கி இருக்கும் சென்னை அணி, இப்போட்டியில் இருந்து வெளியேறியது.