/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில ஜிம்னாஸ்டிக்: 1,000 வீரர்கள் பங்கேற்பு
/
மாநில ஜிம்னாஸ்டிக்: 1,000 வீரர்கள் பங்கேற்பு
ADDED : அக் 25, 2025 11:23 PM

சென்னை: மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி, வேளச்சேரியில் நேற்று துவங்கியுள்ளது. 1,000க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கம் சார்பில், இருபாலருக்குமான 'மாநில ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் 2025' இரண்டு நாள் போட்டி, வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., உள் விளையாட்டு அரங்கில், நேற்று துவங்கியது.
தமிழகத்தின், பல மாவட்டங்களைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான வீரர் - வீராங்க னையர் பங்கேற்றனர்.
ஆறு வயது முதல் 19 வயதுக்குட்பட்டோர் என, ஏழு பிரிவுகளில் போட்டி நடக்கிறது. முதல் நாளில் 6 முதல் 10 வயதுக்குட்பட்ட வீரர் - வீராங்கனையருக்கான டேபிள் வால்ட் மற்றும் பேலன்ஸ் பீம் போட்டிகள் நடந்தன.
அதேபோல், 10 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் தரை உடற்பயிற்சி, ரிங்க் உட்பட ஆறு வகையான சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

