/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில தலைவர் நயினார் கைது பா.ஜ.,வினர் சாலை மறியல்
/
மாநில தலைவர் நயினார் கைது பா.ஜ.,வினர் சாலை மறியல்
மாநில தலைவர் நயினார் கைது பா.ஜ.,வினர் சாலை மறியல்
மாநில தலைவர் நயினார் கைது பா.ஜ.,வினர் சாலை மறியல்
ADDED : டிச 05, 2025 07:20 AM

அம்பத்துார்: பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைதை கண்டித்து, பா.ஜ.,வினர், சென்னையில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீது, கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற ஹிந்து அமைப்பினரை போலீசார் தடுத்ததால், நேற்று முன்தினம் ஹிந்து அமைப்பினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு, 144 தடை உத்தரவு போடப்பட்டது.
இதை கண்டித்து, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் மலைக்கு நேற்று மாலை சென்றால், அப்பகுதியில் ப ரபரப்பு ஏற்பட்டு, மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார், நயினார் நாகேந்திரனை கைது செய்தனர்.
இதையடுத்து, தமிழகம் முழுதும் பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, அம்பத்துார் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பா.ஜ., துணை தலைவர் கரு.நாகராஜன், திடீரென நேற்றிரவு அம்பத்துார் -- செங்குன்றம் சாலையில், கட்சியினருடன் மறியலில் ஈடுபட்டார். அம்பத்துார் சரக உதவி கமிஷனர் மற்றும் போலீசார் பேச்சு நடத்திய பின், போராட்டத்தை கைவிட்டு கலை ந்து சென்றனர்.
தேனாம்பேட்டை: ஆயிரம்விளக்கு மாவட்ட செயலர் கிரி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர், தேனாம்பேட்டை சிக்னல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, தேனாம்பேட்டை போலீசார், அவர்களை சமாதானம் செய்து, கலை ந்து போக செய்தனர். இச்சம்பவங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

