/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில அளவிலான வில் வித்தை போட்டி
/
மாநில அளவிலான வில் வித்தை போட்டி
ADDED : டிச 28, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம்: தமிழக வில் வித்தை சங்கம் சார்பில், முதலாம் ஆண்டு, மாநில வில் வித்தை போட்டிகள், பல்லாவரம் வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில், டிச., 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கின்றன.
இந்திய வில் வித்தை சங்கம் மற்றும் தமிழக ஒலிம்பிக் சங்கம் ஆகியவற்றுடன் இணைப்பு பெற்ற தமிழக வில் வித்தை சங்கம், இந்தியாவிலேயே முதல் முறையாக இப்போட்டியை நடத்துகிறது.
துவக்க நாளான நேற்று, இப்போட்டியை வேல்ஸ் பல்கலை ஐசரி கணேஷ் துவக்கி வைத்தார்.
இரண்டு நாட்கள் நடக்கும் இப்போட்டியில், தமிழகம் முழுதும் இருந்து, பல்வேறு வயது மற்றும் பிரிவுகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

