/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில அளவிலான சிலம்பம் கும்மிடி மாணவன் முதலிடம்
/
மாநில அளவிலான சிலம்பம் கும்மிடி மாணவன் முதலிடம்
ADDED : பிப் 02, 2025 08:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சரவணன் - சுமதி தம்பதியின் மகன் எஸ்.விக்னேஷ், 16.
இவர், கும்மிடிப்பூண்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் - 1, படித்து வருகிறார்.
கடந்த, மூன்று ஆண்டுகளாக சிலம்ப பயிற்சி பெற்று வரும் இவர், பள்ளி கல்வி துறை சார்பில் நடந்த குடியரசு தின விழா போட்டியில், சிலம்ப பிரிவில், மாவட்ட அளவில் விக்னேஷ் தேர்வானார்.
அதன் வாயிலாக, இரு தினங்களுக்கு முன், மயிலாடுதுறையில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்றார்.
அதில், 19 வயதுக்கு உட்பட்ட, 45 கிலோ எடை பிரிவில், கம்பு சண்டை போட்டியில் முதலிடம் பிடித்தார்.

