/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூளை ரத்தநாள வீக்கத்திற்கு 'மியாட்'டில் நவீன சிகிச்சை
/
மூளை ரத்தநாள வீக்கத்திற்கு 'மியாட்'டில் நவீன சிகிச்சை
மூளை ரத்தநாள வீக்கத்திற்கு 'மியாட்'டில் நவீன சிகிச்சை
மூளை ரத்தநாள வீக்கத்திற்கு 'மியாட்'டில் நவீன சிகிச்சை
ADDED : செப் 28, 2024 12:05 AM

சென்னை, மூதாட்டியின் மூளை ரத்த நாளத்தில் ஏற்பட்ட 'அன்யூரிஸம்' என்ற வீக்கத்திற்கு, நவீன உயர் தொழில்நுட்ப சிகிச்சை அளித்து, மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இது குறித்து, மருத்துவமனையின் நரம்பியல் இடையீட்டு சிகிச்சை துறை தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:
ஆவடியைச் சேர்ந்த மூதாட்டி உஷாராணி, 65, பக்கவாத அச்சுறுத்தல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில், அவரது மூளை தண்டுவடத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய தமனியான 'பேசிலர் ஆர்ட்டரி' மற்றும் மூளை, கண்களுக்கு ரத்தத்தை எடுத்து செல்லும், 'இன்டர்னல் கரோடிட் ஆர்ட்டரி' என்ற முக்கிய ரத்த நாளத்திலும் வீக்கம் இருப்பது தெரிந்தது.
தவிர, சிறுநீரகம் சார்ந்த பாதிப்புகளுக்காக நீண்ட நாட்களாக மூதாட்டி சிகிச்சை பெறுவதால், மூளையில், 'அன்யூரிஸம்'பாதிப்பு ஏற்பட்டு, அவரின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது.
வழக்கமாக இதுபோன்ற பாதிப்புக்கு, திறந்தநிலை அறுவை சிகிச்சை, கிளிப்பின் என்ற மூளை நாள வீக்கத்தில் ரத்தம் சூழ்வதை தடுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படும். மூதாட்டியின் வயது காரணமாக, அச்சிகிச்சை பரிந்துரைக்கப்படவில்லை.
அதனால், 'நெக்ஸ்டென்ட்' என்ற நவீன ஸ்டென்ட் உபகரணம், சிறுதுளை வாயிலாக பாதிக்கப்பட்ட இடத்தில் மூதாட்டிக்கு பொருத்தப்பட்டது. தென் மாநிலங்களில் முதன் முறையாக இச்சிகிச்சை பயன்படுத்தப்பட்டது. தலைகீழாக கவிழ்த்தப்பட்ட குடைபோல உள்ள அச்சாதனம், 'எண்டோவாஸ்குலர் காய்லிங்' சுருளை விலகாமல் பற்றிக் கொள்வதுடன், நாளங்களில் ரத்த ஓட்டம் தடையின்றி செல்ல உதவும். இச்சிகிச்சையின் வாயிலாக, மூதாட்டி நலம் பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.