/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில பாராலிம்பிக் நீச்சல் போட்டி: சென்னை சாம்பியன்
/
மாநில பாராலிம்பிக் நீச்சல் போட்டி: சென்னை சாம்பியன்
மாநில பாராலிம்பிக் நீச்சல் போட்டி: சென்னை சாம்பியன்
மாநில பாராலிம்பிக் நீச்சல் போட்டி: சென்னை சாம்பியன்
ADDED : அக் 27, 2025 02:56 AM

சென்னை: மாநில நீச்சல் போட்டியில், சென்னை மாவட்ட அணி, ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டம் வென்று அசத்தியுள்ளது.
இந்திய பாராலிம்பிக் குழு மற்றும் உலக பாரா நீச்சல் சங்கம் சார்பில், தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் இணைந்து, ஆறாவது ஜூனியர் மற்றும் 11வது சீனியர் மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குள வளாகத்தில் நடத்தப் பட்டது.
பல மாவட்டங்களில் இருந்து 300க்கும் அதிகமான பாரா நீச்சல் வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் இறுதி கட்டப் போட்டி, நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில் சிறப்பாக விளையாடிய சென்னை மாவட்ட அணி வீரர் - வீராங்கனையர், பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்றனர்.
சென்னை மாவட்ட அணி 35 தங்கம், 22 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 68 பதக்கங்களுடன், 203 புள்ளிகள் குவித்து முதல் இடத்தை பிடித்ததோடு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இரண்டாவது இடத்தை மதுரை அணியும், மூன்றாவது இடத்தை சேலம் அணியும் பிடித்தன.

