/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சென்னை வீரர் - வீராங்கனையர் அசத்தல்
/
மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சென்னை வீரர் - வீராங்கனையர் அசத்தல்
மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சென்னை வீரர் - வீராங்கனையர் அசத்தல்
மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சென்னை வீரர் - வீராங்கனையர் அசத்தல்
ADDED : செப் 02, 2025 02:13 AM

சென்னை;மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில், சென்னையை சேர்ந்த மணிகண்டனும், மகளிர் பிரிவில் யாஷினியும் முதலிடம் பிடித்து அசத்தினர்.
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், ஐந்தாவது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டிகள், ஐ.சி.எப்., மைதானத்தில் நேற்று முன்தினம் நிறைவடைந்தன.
மூன்று நாட்கள் நடந்த இப்போட்டியில், மாநிலம் முழுதும் இருந்து, 850 வீரர் - வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனியாகவும், 13, 15, 17 வயது, மூத்தோர் உள்ளிட்ட பிரிவுகளிலும் போட்டிகள் நடந்தன.
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், சென்னை வீரர் மணிகண்டன், 12-- - 10, 12 - 10, 4- - 11, 8- - 11, 10 - 12, 11 - 8, 14 - 12 என்ற செட் கணக்கில், மற்றொரு சென்னை வீரரான தருணை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தார்.
பெண்கள் பிரிவில், சென்னையைச் சேர்ந்த யாஷினி, 11 - 6, 14 - 12, 11 - 9, 11 - 5 என்ற செட் கணக்கில், ரிசர்வ் வங்கி வீராங்கனை ஹர்ஷவர்த்தினியை வீழ்த்தினார்.
தொடர்ந்து, 19 வயது ஆண்கள் பிரிவில், சென்னையைச் சேர்ந்த பாலமுருகன், பெண்களில் சென்னையைச் சேர்ந்த ஷ்ரியா; 17 வயது சிறுவரில் சென்னையின் முகமது, சிறுமியரில் சென்னையின் மெர்சி; 15 வயது சிறுவரில், சென்னையின் அக் ஷய் பூஷன், சிறுமியரில் சென்னையின் அனன்யா ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர்.
அதேபோல், 13 வயதில் சிறுவரில் சென்னையின் அஸ்வஜித், சிறுமியரில் நெய்வேலியைச் சேர்ந்த அம்பதி பூஜா; 11 வயது சிறுவரில் சென்னையின் சித்தார்த் ஆதித்யன், சிறுமியரில் ஈரோடு பிரதிகா முதலிடம் பிடித்தனர்.
கார்ப்பரேட் பிரிவில், சென்னையின் பிரசன்னா; மூத்தோரில் விக்னேஷ்வரன், ஓபன் இரட்டையரில் அக் ஷய் பூஷன் மற்றும் விஷ்ருத் ராமகிருஷ்ணன் ஜோடி முதலிடம் பிடித்தனர்.
சிறந்த அகாடமியாக 'வின்வின்' அகாடமி தேர்வானது. சிறந்த வீராங்கனையாக ஈரோடைச் சேர்ந்த வர்னிகா தேர்வானார்.