/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சீனியர் வாலிபால் போட்டி ஐ.சி.எப்., - ஐ.ஓ.பி., அணிகள் சாம்பியன்
/
மாநில சீனியர் வாலிபால் போட்டி ஐ.சி.எப்., - ஐ.ஓ.பி., அணிகள் சாம்பியன்
மாநில சீனியர் வாலிபால் போட்டி ஐ.சி.எப்., - ஐ.ஓ.பி., அணிகள் சாம்பியன்
மாநில சீனியர் வாலிபால் போட்டி ஐ.சி.எப்., - ஐ.ஓ.பி., அணிகள் சாம்பியன்
ADDED : ஜூலை 08, 2025 12:19 AM

சென்னை, ஜூலை 8-
மாநில அளவிலான சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களில் ஐ.ஓ.பி., வங்கி, பெண்களில் ஐ.சி.எப்., அணிகள் சாம்பியன் பட்டங்களை வென்றன.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், 71வது மாநில சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 30ல் துவங்கி, 6ம் தேதி மாலை நிறைவடைந்தது.
போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கம் மற்றும் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட்டன. ஆண்களில் 22 அணிகள், பெண்களில் 38 அணிகள் என, மொத்தம் 60 அணிகள், 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் மோதின.
இறுதி நாளான நேற்று மாலை நடந்த பெண்களுக்கான இறுதிப் போட்டியில், 3 - 0 என்ற கணக்கில், டாக்டர்.சிவந்தி கிளப் அணியை தோற்கடித்து, ஐ.சி.எப்., அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், எஸ்.ஆர்.எம்., அணி, 2 - 0 என்ற கணக்கில் சென்னை எஸ்.டி.ஏ.டி., அணியை தோற்கடித்தது.
ஆண்கள் பிரிவு
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், ஐ.ஓ.பி., வங்கி அணி, 3 - 0 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றது.
மூன்றாம் இடத்திற்கான போட்டியில், ஜி.எஸ்.டி., அணி, 3- 0 என்ற கணக்கில், வருமான வரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளை, தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்தின் தலைவர் கவுதம் சிகாமணி, வருமான வரித்துறை கமிஷனர் பாண்டியன் உள்ளிட்டோர் வழங்கினர்.