/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி திருவள்ளூர் மாவட்டம் 'சாம்பியன்'
/
மாநில ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி திருவள்ளூர் மாவட்டம் 'சாம்பியன்'
மாநில ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி திருவள்ளூர் மாவட்டம் 'சாம்பியன்'
மாநில ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி திருவள்ளூர் மாவட்டம் 'சாம்பியன்'
ADDED : அக் 30, 2024 07:29 PM

சென்னை:தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், 14வது தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி, கோவையில் உள்ள காளப்பட்டி ஓடுதளத்தில் நடந்தது.
போட்டியில், 30 மாவட்டங்களைச் சேர்ந்த, 1,200 மாணவர்கள், 800 மாணவியர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், பல்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில், போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. அனைத்து போட்டிகள் முடிவில், திருவள்ளூர் மாவட்டம், 342 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
தொடர்ந்து, 245 புள்ளிகள் பெற்ற சென்னை மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 198 புள்ளிகளில் கோவை மூன்றாம் இடத்தையும், 165 புள்ளிகளில் கரூர் நான்காம் இடத்தையும் பிடித்து அசத்தின. ஒவ்வொரு போட்டியில், முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ - மாணவியர், ஜனவரியில்ல் நடக்க உள்ள தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளனர். இந்நிகழ்வில், சங்கத்தின் செயலர் முருகானந்தம், செயலர் கவுதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.