/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில விளையாட்டு போட்டிகள் கிரசன்ட் கல்லுாரியில் துவக்கம்
/
மாநில விளையாட்டு போட்டிகள் கிரசன்ட் கல்லுாரியில் துவக்கம்
மாநில விளையாட்டு போட்டிகள் கிரசன்ட் கல்லுாரியில் துவக்கம்
மாநில விளையாட்டு போட்டிகள் கிரசன்ட் கல்லுாரியில் துவக்கம்
ADDED : பிப் 19, 2025 12:13 AM

சென்னை, பி.எஸ்.அப்துல் ரகுமான் கிரசன்ட் பல்கலையின், உடற்கல்வியியல் துறை சார்பில், நிறுவனர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள், நேற்று காலை, வண்டலுார், மேலக்கோட்டையூரில் உள்ள பல்கலை வளாகத்தில் துவங்கின.
இதில், ஆண்களுக்கானகால்பந்து மற்றும் கூடைப்பந்து, இருபாலருக்கான பால் பேட்மின்டன் எனமூன்று போட்டிகள், இரண்டு நாட்கள் நடக்கின்றன.
சென்னை, திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாநிலம் முழுதும் இருந்து, கால்பந்தில் 24 அணிகள்; கூடைப்பந்தில்16 அணிகள்; பால் பேட்மின்டனில் ஆண்களில் 16, பெண்களில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. பல்வேறு போட்டிகளில், 68 கல்லுாரி மற்றும் பல்கலை அணிகள் இடம் பெற்றுள்ளன.
முதல் நாள் போட்டியை, பல்கலையின் துணை வேந்தர் முருகேசன், பதிவாளர் ராஜா உசைன், உடற்கல்வியியல் இயக்குநர் செல்வகுமார் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
கூடைப்பந்து முதல் போட்டியில், படூர் ஹிந்துஸ்தான் பல்கலை மற்றும் ஆவடி எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன.
விறுவிறுப்பான இப்போட்டியில், துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும் முன்னிலையில் இருந்தன. முடிவில், ஹிந்துஸ்தான் அணி, 57 - 46 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.