/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில 'டிரம்போலைன் - ஜிம்னாஸ்டிக்' சென்னை வீரர், வீராங்கனையர் அசத்தல்
/
மாநில 'டிரம்போலைன் - ஜிம்னாஸ்டிக்' சென்னை வீரர், வீராங்கனையர் அசத்தல்
மாநில 'டிரம்போலைன் - ஜிம்னாஸ்டிக்' சென்னை வீரர், வீராங்கனையர் அசத்தல்
மாநில 'டிரம்போலைன் - ஜிம்னாஸ்டிக்' சென்னை வீரர், வீராங்கனையர் அசத்தல்
ADDED : ஜூலை 29, 2025 12:37 AM

சென்னை,
மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டியில், டிரம்போலைன் பிரிவில், சென்னை, ஈரோடு, சேலம், காஞ்சிபுரம் வீரர் - வீராங்கனையர், முதல் மூன்று இடங்களை பிடித்து அசத்தினர்.
தமிழ்நாடு மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் சார்பில், மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டி, வேளச்சேரியில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மாநிலத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
இதில், ஆர்டிஸ்டிக் பிரிவில், 6, 8, 10 வயதுக்குட்பட்டோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல் அனைத்து வயதினருக்கும், டிராம்போலைன், டம்பிளிங், அக்ரோபாட்டிக் ஆகிய போட்டிகளும், இருபாலருக்கும் நடத்தப்பட்டன.
'டிராம்போலைன்' சீனியர் பெண்களில், சென்னையைச் சேர்ந்த பிரியா முதலிடத்தை பிடித்தார். சென்னை வீராங்கனையர் ஈஸ்வரி மற்றும் கேத்தலின் நிருபமா ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றினர்.
ஜூனியர் பெண்களில், சென்னை தனிஷ்கா, திருவள்ளூர் ஜோஷினி, சென்னை சஹானா ஆகியோர், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். சப் - ஜூனியர் பெண்களில் ஈரோடு ராகவி, நேத்ரா, சென்னை ஜிஷா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.
ஆண்கள் பிரிவில், சீனியரில் சென்னை தனுஷ் முதலிடத்தையும், ஈரோடு ஸ்ரீசாந்த் இரண்டாமிடத்தையும், சேலம் சர்வேஸ்வர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
ஜூனியரில் ஈரோடு சந்தானம், சேலம் ஹர்ஷன், ஈரோடு யோகன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர். சப் - ஜூனியரில், செங்கல்பட்டு ரிஷிகுமார், காஞ்சிபுரம் விர்ஷின், சென்னை தருண் கார்த்திக் ஆகியோர், வெற்றி பெற்றனர்.
போட்டியில், சிறந்து விளக்கிய வீரர் - வீராங்கனையர் ஆக., 8 - 10ம் தேதிகள் வரை, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளனர்.
அதேபோல், 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், சிறுமியரில் சென்னை ஜெபராணி, சிறுவரில் காஞ்சிபுரம் பிராகிருத் ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர்.