/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
/
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
ADDED : பிப் 09, 2024 12:26 PM

சென்னை தன்னாட்சி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் ஏழு நாட்கள் நடைபெற்றது. “தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் நடைபெற்ற இம்முகாமின் ஒரு பகுதியாக, நகர்ப்புற சமூகங்களுக்குச் சென்று தொண்டாற்றும் பயிற்சி நாட்டுநலப்பணி மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
பொறுப்புள்ள குடிமக்களாக மாணவ சமுதாயம் திகழ்வதற்கும் தங்களைச் சமூக ரீதியாகத் தயார்படுத்திக் கொள்வதற்கும் பள்ளிப் பருவம் முதலே விழிப்புணர்வு தேவை என்பதறிந்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துதல், தன்னார்வலர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் ஆளுமை மேம்பாட்டு பயிற்சிக்கான அமர்வுகள் நடத்தப்பட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
முகாமின் நிறைவு நாளான பிப்- 8 லுஅ ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் வளாகத்திற்கு வெளியே மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த மனிதச் சங்கிலி நடந்தது.
சென்னை பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வனிதா அகர்வால் தலைமை தாங்கினார். அவருடன் இணைந்து தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஸ்மிதா சதாசிவன் , மனித சங்கிலியை கொடியை அசைத்து மனித சங்கிலியைத் தொடங்கி வைத்தனர்.
மனிதச்சங்கிலி
ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலியில், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஸ்டெல்லா மேரி, கல்லூரி சுழற்சி இரண்டின் துணை முதல்வர் ஜெயப்பிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் லியோ டென்சிலி லி, முனைவர் பேன்சி ஜாண், செல்வி மார்ட்டினா ஜெனிஃபர், இளைஞர் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலகர்கள் முனைவர் மேரி ஆபிரகாம், முனைவர் மாதவி, மற்றும் செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலர் ஹாரியட் சத்தியவதி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் ஸ்டெல்லா ஆகியோர் பங்கேற்றனர்.

