/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5 வயது சிறுவனை கடித்த தெரு நாயால் அச்சம்
/
5 வயது சிறுவனை கடித்த தெரு நாயால் அச்சம்
ADDED : செப் 27, 2025 11:31 PM
சென்னை;சைதாப்பேட்டையில் திரிந்த தெருநாய், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை கடித்ததில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சைதாப்பேட்டை, பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவேக். இவரது மகன் பிரணவ் விதிஷ், 5, நேற்று முன்தினம், வீட்டின் அருகே தெருவில் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் திரிந்த ஒரு தெரு நாய், திடீரென ஓடி வந்து சிறுவனின் காலில் கடித்துள்ளது. நாயை துரத்தி சிறுவனை மீட்ட பெற்றோர், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின் மாலை 6:00 மணிக்கு மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை 11:00 மணிக்கு சிகிச்சை முடிந்து, சிறுவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்படவில்லை.
தகவலறிந்த மாநகராட்சியில் நாய் பிடிக்கும் ஊழியர்கள், சிறுவனை கடித்த தெரு நாய் உட்பட நான்கு நாய்களை பிடித்து சென்றனர்.