/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பக்கவாத பாதிப்புக்கு நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை அவசியம்
/
பக்கவாத பாதிப்புக்கு நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை அவசியம்
பக்கவாத பாதிப்புக்கு நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை அவசியம்
பக்கவாத பாதிப்புக்கு நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை அவசியம்
ADDED : நவ 06, 2025 03:00 AM
சென்னை: பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால், நான்கரை மணி நேரத்திற்குள், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என, அரசு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உலக பக்கவாத ஒழிப்பு தினத்தையொட்டி, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, தமிழக சுகாதார சேவைகள் திட்ட இயக்குநர் வினீத் துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, மருத்துவமனை முதல்வர் சாந்தராமன், நரம்பியல் துறை இயக்குநர் முகுந்தன் ஆகியோர் கூறியதாவது:
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும் பக்கவாத சிறப்பு சிகிச்சை பிரிவு மற்றும் மேம்பட்ட நரம்பியல் இடையீட்டு சிகிச்சை பிரிவும் இயங்குகிறது.
ஒருவருக்கு, கை, கால் செயலிழப்பு, கை, கால் மரத்துப்போகுதல், நடப்பதில் தள்ளாட்டம், பேச்சு குளறுதல், பிறர் பேசுவதை புரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளிட்டவை பக்கவாத பாதிப்புக்கான அறிகுறிகள். இதுபோன்ற அறிகுறி ஏற்பட்டால், நான்கரை மணி நேரத்திற்குள், மருத்துவமனையை நாடுவது மிக அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

