/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.48.50 லட்சத்தில் சீரமைத்த குளத்தில் கடும் துர்நாற்றம்
/
ரூ.48.50 லட்சத்தில் சீரமைத்த குளத்தில் கடும் துர்நாற்றம்
ரூ.48.50 லட்சத்தில் சீரமைத்த குளத்தில் கடும் துர்நாற்றம்
ரூ.48.50 லட்சத்தில் சீரமைத்த குளத்தில் கடும் துர்நாற்றம்
ADDED : பிப் 21, 2025 12:17 AM

மாங்காடு, மாங்காடு அருகே, பட்டூரில் உள்ள குளம், 2023ல் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 48.50 லட்சம் ரூபாய் மதிப்பில் துார்வாரி சீரமைக்கப்பட்டது; நடைபாதை, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த குளத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக குளத்தில் கலக்கிறது.
இதனால், குளம் முழுதும் கழிவுநீர் தேங்கி, கருமையான நிறத்தில் காட்சியளிப்பதோடு, துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், அப்பகுதியின் நிலத்தடி நீர் மாசடைவதோடு, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல முடியாத நிலை உள்ளது. கழிவுநீர் கலப்பதை தடுத்து, குளத்தைச் சுற்றி பூங்கா, சிறுவர் விளையாட்டு சாதனங்கள், இருக்கைகள் உள்ளிட்ட வசதி ஏற்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் தெரிவித்தனர்.