/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அவதுாறாக பேசியவரை தாக்கிய மாணவர் கைது
/
அவதுாறாக பேசியவரை தாக்கிய மாணவர் கைது
ADDED : ஜன 27, 2025 02:41 AM
மதுரவாயல்:மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ், 40; அதே பகுதியில் டீ வியாபாரம் செய்கிறார்.
நேற்று காலை, அந்த வழியாக நடந்து சென்ற, அரசு பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவரை தகாத வார்த்தைகளால் பேசினார்.
ஆத்திரமடைந்த மாணவர், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து, நாகராஜ் பின் தலையில் தாக்கியதில், அவர் மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 16 வயது மாணவரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், மாணவரின் தாயுடன் நாகராஜ் மூன்று ஆண்டுகளாக தகாத உறவில் இருந்து வந்ததாகவும், இதை உறவினர்கள் கண்டித்ததால் அந்த பெண் நாகராஜிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், அந்த பெண்ணின் மகன் சாலையில் செல்லும் போதெல்லாம் ஆபாசமாக திட்டி பிரச்னை செய்துவந்ததும், போலீசார் விசாரணையில் தெரிந்தது.

