/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணத்தை 'பிட்காயின்'னாக மாற்றி போதை பொருள் வாங்கிய மாணவர்
/
பணத்தை 'பிட்காயின்'னாக மாற்றி போதை பொருள் வாங்கிய மாணவர்
பணத்தை 'பிட்காயின்'னாக மாற்றி போதை பொருள் வாங்கிய மாணவர்
பணத்தை 'பிட்காயின்'னாக மாற்றி போதை பொருள் வாங்கிய மாணவர்
ADDED : நவ 19, 2025 04:11 AM
நொளம்பூர்: நொளம்பூர், அண்ணாமலை அவென்யூ சந்திப்பில் போதை பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அம்பத்துாரைச் சேர்ந்த மோனிஷ், 24, என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் 'மேஜிக்' காளான், எல்.எஸ்.டி., ஸ்டாம்ப் வகை போதை பொருட்கள் இருப்பது தெரிந்தது.
நான்காம் ஆண்டு மருத்துவ மாணவரான இவர், 'ஆன்லைன்' வாயிலாக, பணத்தை பிட்காயினாக மாற்றி, போதை பொருட்களை வாங்கியது தெரிந்தது. தன்னுடன் பயிலும் ஆண், பெண் மருத்துவ மாணவர்களுக்கு, அவற்றை அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது.
அவரிடம் இருந்து 2.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 102 எல்.எஸ்.டி., ஸ்டாம்ப், 50 கிராம் 'மேஜிக்' காளான் உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.