/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாருடன் மாணவர் காங்., நிர்வாகிகள் வாக்குவாதம்
/
போலீசாருடன் மாணவர் காங்., நிர்வாகிகள் வாக்குவாதம்
ADDED : ஆக 22, 2025 12:45 AM
சென்னை,'தலைமை தேர்தல் ஆணையம், டிஜிட்டல் ஓட்டு வாக்காளர்கள் பட்டியலை உடனே வெளியிட வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தபால் அட்டைகளில் மாநில கல்லுாரி மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழக மாணவர் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநிலக்கல்லுாரி மாணவர்களிடம் கையெழுத்து பெற, தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி தலைமையில் விஜய், ரியாஸ், மணிஷ்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர். அவர்களை கல்லுாரிக்குள் அனுமதிக்க, போலீசார் மறுத்தனர். போலீஸ் அனுமதி பெற வேண்டும் எனக் கூறினர். இதனால், இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின், மாணவர் காங்கிரசார் கல்லுாரிக்குள் சென்று, மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து பெற்றனர்.