/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடு குறுக்கே பாய்ந்து விபத்து: மாணவர் பலி
/
மாடு குறுக்கே பாய்ந்து விபத்து: மாணவர் பலி
ADDED : ஆக 14, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, மாடு குறுக்கே வந்ததில் பைக்கில் வந்த மாணவர் விபத்தில் சிக்கி பலியானார்.
திருநின்றவூரைச் சேர்ந்த சோனு பிரியன், 22; சட்டக் கல்லுாரி மாணவர். இவர் தன் நண்பர் பிரவீன் 23, என்பவருடன், நேற்று மாலை, வேலப்பன்சாவடி கல்லுாரி யில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்றனர். பைக்கை பிரவீன் ஓட்டினார்.
வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில், சோனு பிரியன் சம் பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரவீன், லேசான காயங் களுடன் உயிர் தப்பினார்.