ADDED : ஏப் 16, 2025 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரவள்ளூர்,
கொளத்துார், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்த கவுரிசங்கர்பால் மகன் அஜய்பால், 17.
நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே உள்ள கழிப்பறைக்கு சென்றார். கதவு அருகே உள்ள சுவிட்ச்சை போட்ட போது, அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.
அதே இடத்தில் மயங்கி விழுந்த அஜய் பாலை, அவரது பெற்றோர், ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவர் பரிசோதனையில் வரும் வழியிலே அஜய்பால் இறந்தது தெரிந்தது.
பெரவள்ளூர் போலீசார், அஜய்பாலின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
அகரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதிய அஜய்பால், தேர்வு முடிவிற்காக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.