ADDED : அக் 13, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: காய்ச்சல் காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 17; சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில் நுட்ப கல்லுாரியில், பி.டெக்., முதலாம்ஆண்டு படித்து வந்தார்.
அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த அவருக்கு, நேற்று முன்தினம் கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. இதனால், நந்தனம் சேமியர்ஸ் சாலையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி மாணவி ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் மரணம் குறித்து விசாரிக்கின்றனர்.