/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தைகள் உதவி மையத்தில் பணிபுரிய அழைப்பு
/
குழந்தைகள் உதவி மையத்தில் பணிபுரிய அழைப்பு
ADDED : அக் 13, 2025 04:59 AM
சென்னை: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே 'கியோஸ்க்'கில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
தலா ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆற்றுப்படுத்துனர், எட்டு மேற்பார்வையாளர், பத்து வழக்கு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள், https://chennai.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து, ஆலந்துார், புதுத்தெருவில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம், 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.