ADDED : ஜூன் 04, 2026 08:42 AM
திருநின்றவூர்: நண்பருடன் குளித்த பிளஸ் 2 மாணவர், திருநின்றவூர் நத்தமேடு ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, கணேஷ் நகரைச் சேர்ந்தவர் கமலநாதன் மகன் தருண், 17; தனியார் பள்ளியில் பிளஸ் 2 சேர இருந்தார்.
இன்று, பள்ளிகள் திறக்கும் நிலையில், நடுக்குத்தகை பகுதியைச் சேர்ந்த, தன் நண்பர் சரண், 17, என்பவருடன், நத்தமேடு ஏரியில், நேற்று மதியம் குளித்தார்.
நத்தமேடு, ராணுவ குடியிருப்பு பின்புறமுள்ள ஏரியில் குளித்தபோது, நீச்சல் தெரியாமல் தருண் நீரில் மூழ்கி இறந்தார். திருநின்றவூர் போலீசார், தருண் உடலை கைப்பற்றினர்.
வாலிபர் பலி கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு, 34; தாம்பரம், மாடம்பாக்கம் பகுதியில் நண்பர்களுடன் தங்கி, கால் டாக்சி ஓட்டி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, பாக்கம் அருகே சவாரி முடித்து, மதுக்கூடத்தில் மது அருந்தினார். அங்கு பழக்கமான பிரபாகரன் என்பவருடன், பாலவேடு ஏரியில் குளித்தார்.
அப்போது, நீச்சல் தெரியாத விஷ்ணு நீரில் மூழ்கினார். தகவலறிந்து வந்த திருவூர் தீயணைப்பு துறையினர், இரவு முழுதும் தேடிய நிலையில், விஷ்ணு கிடைக்கவில்லை. நேற்று மதியம், விஷ்ணுவின் உடல் கரை ஒதுங்கியது.
ஆவடி முத்தா புதுப்பேட்டை ோலீசார் உடலை கைப்பற்றினர்.
