/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவர்கள் பேட்டி : பார்வையற்றோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
மாணவர்கள் பேட்டி : பார்வையற்றோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
மாணவர்கள் பேட்டி : பார்வையற்றோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
மாணவர்கள் பேட்டி : பார்வையற்றோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 12:22 AM

பார்வையற்றோர் பள்ளி
100 சதவீதம் தேர்ச்சி
பூந்தமல்லியில், பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 120 மாணவர்கள் பயில்கின்றனர்.
இங்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 மாணவர்கள் எழுதினர். இதில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். யோகேஷ் என்ற மாணவர் 423 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.
என் வெற்றிக்கு காரணம் பள்ளி ஆசிரியர்கள்தான். எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும், கோவப்படாமல் பொறுமையாக சொல்லி புரியவைப்பர். பெற்றோரும், உறுதுணையாக இருந்தனர்.
நான் ஆங்கில வழிப்பள்ளியில் பயின்றேன். அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வர வேண்டும். ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
- எஸ்.தேஜஸ்வினி
மதிப்பெண்: 492
சென்னை மாநகராட்சி பள்ளி, சைதாபேட்டை
வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்களை நன்கு கவனித்து படித்து வந்தேன். தவிர, அவ்வப்போது சந்தேகம் தீர்த்து, ஆசிரியர்களின் முயற்சியால் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளேன். ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பதே என் லட்சியம். என் தாய் 'ஹவுஸ் கீப்பிங்' வேலை செய்கிறார். அவரை பார்த்து கொள்ள வேண்டும்.
எஸ்.அருண், 15,
மதிப்பெண்: 487,
சென்னை மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு
தந்தை, நாட்டுமருந்து கடை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று பரவலுக்கு பின், தனியாரில் கட்டணம் செலுத்த முடியாததால், மாநகராட்சி பள்ளியில் சேர்ந்தேன். பள்ளியில் மாலை நேர கூடுதல் வகுப்புகள் நடத்தி ஆசிரியர்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். எப்போதுமே முழு கவனத்துடன் படிப்பேன். பிளஸ் 2 மற்றும் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவர் ஆவேன்.
ஏ.சோபனா,
மதிப்பெண்: 491,
புத்தா தெரு சென்னை பள்ளி