ADDED : மார் 20, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேடவாக்கம், பல்லாவரம், கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் விஷ்வேஷ், 16, இவர், 10ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். நேற்று முன்தினம் தன் பிறந்தநாளை கொண்டாட, நண்பரான சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ஹரிசரண், 15, என்பவருடன் பைக்கில் சென்றார்.
மேடவாக்கம் மேம்பாலத்தில் படிந்துள்ள மணலால் டயர் சறுக்கி, பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பரிசோதனையில், விஷ்வேஷ் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. ஹரிசரண் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.

