/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேவார திருமுறை ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்கள் உற்சாகம்
/
தேவார திருமுறை ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்கள் உற்சாகம்
தேவார திருமுறை ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்கள் உற்சாகம்
தேவார திருமுறை ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்கள் உற்சாகம்
ADDED : ஜன 26, 2025 03:03 AM

சென்னை:சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில், 'தேவாரத் திருமுறை ஒப்புவித்தல் போட்டி - 2025, மயிலாப்பூரில் உள்ள சாவித்திரியம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. சேக்கிழார் ஆராய்ச்சி மைய தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ஜெகதீசன் தலைமை வகித்தார்.
ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இவற்றில், 20 பள்ளிகளை சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் அருளிய பாடல்களை, பக்தி பரவசத்துடன், மனம் உருகி பாடி, போட்டிகளில் அசத்தினர்.
நிகழ்ச்சியில், சேக்கிழார் ஆராய்ச்சி மைய செயலர் மோகன் பேசுகையில், ''வாழ்வில் வெற்றியடைய மனப்பாடம் என்பது அடிப்படை. அதிலும் திருமுறையை மனப்பாடம் செய்வது வாழ்வின் வெற்றிக்கு பெரும் உந்து சக்தியாக இருக்கும்,'' என்றார்.
'மாணவர்களுக்கு, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் ஜூலை கடைசி வார வெள்ளி அன்று, சென்னையில் நடக்கவுள்ள, தெய்வசேக்கிழார் விழாவில், பரிசுகள் வழங்கப்படும்' என, சேக்கிழார் ஆராய்ச்சி மைய நிர்வாகிகள் கூறினர்.
நிகழ்ச்சியில், போட்டி அமைப்பாளர்கள் ராஜாராமன், மணி, எழில்செல்வன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

