ADDED : பிப் 06, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,சென்னை கொளத்துார் பெரியார் நகரில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, அமுதம் பல்பொருள் அங்காடி உள்ளது.
அதன் அருகில் ஆறு ரேஷன் கடைகள் உள்ளன. அதில், அமுதம் அங்காடியில் மளிகை உட்பட வீட்டிற்கு தேவையான பொருட்கள் விற்கப்படுகின்றன.
மேற்கண்ட அங்காடி மற்றும் ரேஷன் கடைகள் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆகின்றன.
அவற்றை இடித்து, தனியார் பல்பொருள் அங்காடிகளுக்கு இணையாக புனரமைத்து, நவீனப்படுத்த உணவு துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகள் குறித்து, அந்த இடத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று, ஆய்வு செய்தனர்.