/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொரட்டூரில் துணைமின் நிலையம் சோதனை ஓட்டம்
/
கொரட்டூரில் துணைமின் நிலையம் சோதனை ஓட்டம்
ADDED : ஏப் 24, 2025 12:23 AM
சென்னை, கூடுதல் மின்சாரம் எடுத்து வந்து வினியோகம் செய்வதற்காக, சென்னை அடுத்த கொரட்டூரில், 501.72 கோடி ரூபாயில், 400 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையத்தை, மின் வாரியம் அமைத்துள்ளது. இதற்கு, திருவள்ளூர் மாவட்டம், மணலி, 400 கி.வோ., துணைமின் நிலையத்தில் இருந்து, 'கேபிள்' வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து வரப்பட உள்ளது.
கொரட்டூர் துணைமின் நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அதில் உள்ள மின் சாதனங்கள் இயக்கப்பட்டு, சோதனைகள் நடக்கின்றன. நேற்று, மணலியில் இருந்து கொரட்டூர் துணைமின் நிலையத்திற்கு மின்சாரம் எடுத்து வருவதற்கான சோதனை செய்யப்பட்டது.
இதை, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், மின் பகிர்மான கழக மேலாண் இயக்குனர் இந்திராணி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். விரைவில் கொரட்டூர் துணைமின் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதன் வாயிலாக, சென்னை மற்றும் புறநகரில் கூடுதல் மின்சாரம் கையாளப்படும்.
*

