/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சட்டென மாறிய வானிலை 17 விமானங்கள் தாமதம்
/
சட்டென மாறிய வானிலை 17 விமானங்கள் தாமதம்
ADDED : நவ 08, 2025 02:27 AM
சென்னை: திடீரென மாறிய வானிலையால், சென்னையில் 17 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு 8:25 மணி கோவை விமானம்; 8:50 மணி ஜெய்ப்பூர் விமானம்; 9:10 மணி ஹைதராபாத் விமானம்; 9:10 மணி மும்பை விமானம்; 10:30 மணி கொச்சி விமானம்; இரவு 10:50 மணி கொல்கட்டா விமானம் உள்ளிட்ட 17 விமானங்களின், புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரங்களில் ஒன்றரை முதல் மூன்று மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது.
நாட்டின் மற்ற பகுதிகளிலும், திடீரென மோசமான வானிலை நிலவியதே தாமதத்திற்கு காரணம் என, விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர். சிலர் வேறுவழியின்றி பயணத்தை ரத்து செய்தனர்.

