/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விடுதிகளுக்கான மாநில கால்பந்து தேனி, மதுரை அணிகள் சாம்பியன்
/
விடுதிகளுக்கான மாநில கால்பந்து தேனி, மதுரை அணிகள் சாம்பியன்
விடுதிகளுக்கான மாநில கால்பந்து தேனி, மதுரை அணிகள் சாம்பியன்
விடுதிகளுக்கான மாநில கால்பந்து தேனி, மதுரை அணிகள் சாம்பியன்
ADDED : நவ 08, 2025 02:29 AM
சென்னை: எஸ்.டி.ஏ.டி., விடுதிகளுக்கு இடையிலான மாநில கால்பந்து போட்டியில், தேனி, மதுரை ஆடவர் அணிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தின.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான எஸ்.டி.ஏ.டி.,யின் விடுதி மாணவ - மாணவியருக்கான கால்பந்து, ஹாக்கி, பாக்சிங் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள், சென்னையில் நடக்கின்றன. இதில், மாநிலத்தின் எஸ்.டி.ஏ.டி. விடுதிகளில் தங்கி பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
அந்த வகையில், சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் இருபாலருக்குமான கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் என மூன்று பிரிவுகளாக, 'லீக்' முறையில் நடத்தப்பட்டன.
இதன் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் பிரிவில், தேனி மாவட்ட விடுதி அணி அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், திருச்சி மாவட்ட அணி இரண் டாவது இடத்தையும் பிடித்தன.
அதேபோல, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், திருச்சி அணி முதல் இடத்தையும், நெய்வேலி அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
அடுத்து 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மதுரை அணி முதல் இடத்தையும், நெய்வேலி அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
மகளிர் பிரிவில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நாமக்கல் சாம்பியனாகவும், திருச்சி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திண்டுக்கல் முதலிடமும், நாமக்கல் இரண்டாம் இடமும் பெற்றன. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நாமக்கல் முதலிடமும், ஈரோடு இரண்டாவது இடத்தையும் பிடித்து அசத்தின.

