/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழை துவங்கியதுமே நிரம்பிய 245 குளங்கள்
/
மழை துவங்கியதுமே நிரம்பிய 245 குளங்கள்
ADDED : நவ 08, 2025 02:29 AM
சென்னை: வடகிழக்கு பருவ மழை துவங்கிய சில நாட்களிலேயே, சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும், 245 குளங்களும் நிரம்பி விட்டன.
சென்னை மாநகராட்சியில், நிலத்தடி நீரை சேகரிக்க முக்கிய ஆதாரமாக குளங்கள் உள்ளன. அதன்படி, பழுதடைந்து காணப்பட்ட குளங்களை, மாநகராட்சி அடையாளம் கண்டு, துார்வாரி அகலப்படுத்தும் பணியை செய்து வருகிறது.
குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொழியும் மழைநீர், குளத்தில் வந்து சேரும்படியான வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
குளம் நிரம்பினால் நீரை வெளியேற்ற, அருகாமையில் உள்ள கால்வாயில் இணைப்பு தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை துவங்கிய சில நாட்களில், சென்னையில் உள்ள 245 குளங்களும் நிரம்பி விட்டதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில் சமீபத்தில் புனரமைக்கப்பட்ட, 33 குளங்கள் உட்பட 245 குளங்களும் நிரம்பியுள்ளன. இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்' என்றனர்.

