/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ 'சாகசம்' செய்தவர் கோயம்பேடில் கைது
/
ஆட்டோ 'சாகசம்' செய்தவர் கோயம்பேடில் கைது
ADDED : நவ 08, 2025 02:31 AM
கோயம்பேடு: கோயம்பேடு, 100 அடி சாலையில் ஆட்டோ பின் சக்கரத்தை துாக்கியபடி ஓட்டியவரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கோயம்பேடு 100 அடி சாலையில், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே, கடந்த 5ம் தேதி இரவு, ஒரு ஆட்டோ அதிவேகமாகவும், ஆட்டோவின் பின் சக்கரத்தை துாக்கி, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும் சென்ற வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியானது.
இதுகுறித்து, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆட்டோவின் பதிவு எண் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர்.
இதையடுத்து, ஆட்டோ 'வீலிங்' செய்த திருவேற்காடு, அயப்பாக்கத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்ற 'பஞ்சர்' வாசு, 41, என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து, ஆட்டோ மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன.

