/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.66 லட்சம் சீட்டு மோசடி தம்பதி உட்பட மூவர் கைது
/
ரூ.66 லட்சம் சீட்டு மோசடி தம்பதி உட்பட மூவர் கைது
ADDED : நவ 08, 2025 02:32 AM

சென்னை: மாதாந்திர சீட்டு நடத்தி 65.91 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 33. இவரது மனைவி டெய்சி இசபெல்லா, 30.
இவருக்கு பழக்கமான தமிழ்ச்செல்வி, 38 என்பவரும், அவரது கணவர் பிரபு, 41 என்பவரும், 'வருடாந்திர கல்வி கட்டணம் மாத சிறுசேமிப்பு திட்டம்' என்ற பெயரில், சீட்டு நடத்தி வந்துள்ளனர்.
மாதம் 1,000 வீதம் 12 மாதங்கள் கட்டினால், 12,000 ரூபாயுடன் கூடுதலாக 4,000 சேர்த்து, 16,000 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். வைப்பு நிதி திட்டத்தில், 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம், 3,000 வட்டியாக தருவதாகவும் ஆசைகாட்டியுள்ளனர். இதையடுத்து, ராஜேஷ்குமார் 8.55 லட்சம் ரூபாய் கட்டி உள்ளார்.
சீட்டு பணம் முதிர்ச்சியடைந்த பின் பணத்தை கேட்டால், தமிழ்ச்செல்வி தரப்பினர் மிரட்டி உள்ளனர்.
இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.
இதில், ராஜேஷ்குமார் உட்பட 38 பேரிடம், 65.91 லட்சம் ரூபாய் வரை, பிரபு - தமிழ்ச்செல்வி தம்பதி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்களுக்கு உடந்தையாக தமிழ்ச்செல்வியின் தாய் சரஸ்வதி, 65 இருந்துள்ளார். மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

