/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஷிவ்மொக்கா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு
/
ஷிவ்மொக்கா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு
ADDED : ஜூலை 19, 2025 11:19 PM
சென்னை:சென்னையில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிவ்மொக்காவுக்கு புறப்பட்ட விமானத்தில், இயந்திர கோளாறு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் ஷிவ்மொக்காவுக்கு இயக்கப்படும் 'ஸ்பைஸ்ஜெட்' விமானம், சென்னை விமான நிலையத்தில், நேற்று மதியம் 2:50 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 90 பேர் இருந்தனர்.
விமானம், ஓடுபாதையில் ஓட துவங்கியபோது, இயந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானி அறிந்தார், இதையடுத்து விமானம், ஓடுபாதையிலேயே நிறுத்தி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த விமான பொறியாளர்கள் குழுவினர், இயந்திர கோளாறு சரிபார்க்கும் பணியில் இறங்கினர். மாலை 4:00 மணி கடந்தும் சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து பயணியர் 90 பேரையும், மாற்று விமானத்தில் அனுப்பி வைப்பதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.