ADDED : ஆக 27, 2025 12:32 AM

அடையாறு,அடையாறு எல்.பி., சாலையில், திடீரென உள்வாங்கிய பள்ளத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கினர்.
அடையாறு மேம்பாலத்தின் கீழ் பகுதி, எல்.பி., சாலையில் நேற்று மதியம் திடீரென பள்ளம் விழுந்தது. கவனக்குறைவாக வந்த சில இருசக்கர வாகனங்கள், அந்த பள்ளத்தில் சிக்கின.
பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சுதாரித்து, பள்ளத்தை விட்டு தள்ளி சென்றனர். இரண்டு அடி ஆழத்தில் பள்ளம் விழுந்தது. சில வாகன ஓட்டிகள், கடைக்காரர்கள் சேர்ந்து தடுப்பு அமைத்து, அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தடுத்தனர்.
பின், மாநகராட்சி ஊழியர்கள் வந்து, கட்டட கழிவுகள் கொண்டு பள்ளத்தை நிரப்பி சரி செய்தனர். கழிவுநீர் குழாயில் விரிசல் விழுந்து, மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் விழுந்ததாகவும், போக்குவரத்து அதிகமுள்ள சாலையானதால், இரவில் குழாய் பழுது சரி செய்யப்படும் எனவும், அதிகாரிகள் கூறினர்.