/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை சீரமைப்பு பணிகள் 6 மாதமாக நடப்பதால் அவதி
/
சாலை சீரமைப்பு பணிகள் 6 மாதமாக நடப்பதால் அவதி
ADDED : மார் 08, 2024 12:39 PM

தேனாம்பேட்டை,
'-மிக்ஜாம்' புயலின் போது சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி, கடந்த ஆறு மாதங்களாக மந்த கதியில் நடைபெற்று வருவதால், கடும் அதிருப்தி நிலவுகிறது.
சென்னையில் மிக்ஜாம் புயலின் போது, பல்வேறு இடங்கள் மூழ்கின. குறிப்பாக, முகத்துவாரம் பகுதி சரியான முறையில் துார்வாரப்படாத காரணத்தால், மழை நீரை கடல் உள்வாங்கவில்லை.
இதனால் திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர், போயஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், போயஸ் கார்டன், கஸ்துாரி எஸ்டேட் இரண்டாவது தெருவில், மிகப்பெரிய டிரான்ஸ்பார்மர் விழுந்தது. இதில், அந்த பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு சாலையும் கடுமையாக சேதமடைந்தது.
ஆனால் இந்த பகுதியை, இன்னும் சீர் செய்யவில்லை. 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக, இதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இப்பணிகள் மந்தகதியில் நடப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மிக்ஜாம் புயலின் போது, இந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு பெரிய சேதம் ஆனது. தினமும் இங்கு பொக்லைன் இயந்திரம் வாயிலாக, ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், ஆறு மாதங்களாக பணி மந்தகதியில் நடைபெற்று வருவதால், பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

