/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூடுவாஞ்சேரியில் ரூ.20, 50 முத்திரை தாள் கிடைக்காமல் அவதி
/
கூடுவாஞ்சேரியில் ரூ.20, 50 முத்திரை தாள் கிடைக்காமல் அவதி
கூடுவாஞ்சேரியில் ரூ.20, 50 முத்திரை தாள் கிடைக்காமல் அவதி
கூடுவாஞ்சேரியில் ரூ.20, 50 முத்திரை தாள் கிடைக்காமல் அவதி
ADDED : மார் 14, 2024 12:18 AM
கூடுவாஞ்சேரி, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட நந்திவரத்தில், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது.
இங்கு, தினந்தோறும் இடம் மற்றும் வீடுகள் வாங்குவோர் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு வருகின்றனர்.
அதற்கு, 20 மற்றும் 50 ரூபாய் அரசு முத்திரைத்தாள்கள், சில தினங்களாக எங்கும் கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் 100 ரூபாய் முத்திரைத்தாள் வாங்கிச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
சில தினங்களாக 20, 50 ரூபாய் அரசு முத்திரை தாள்கள் கிடைக்கவில்லை.
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட அரசு முத்திரைத்தாள் விற்பனை செய்யும் முகவர்கள் இருக்கின்றனர். அவர்களிடமும் கிடைக்கவில்லை.
அதுபற்றி அவர்களிடம் கேட்டால், 'எங்களுக்கு வரவில்லை' எனக் கூறுகின்றனர். அதற்கான காரணங்களைக் கூற மறுக்கின்றனர்.
சாதாரணமாக, ஒருவர் வீடு வாடகைக்கு சென்றாலும், வாடகை ஒப்பந்தமாக, 20 ரூபாய் முத்திரை தாளில் எழுதி ஒப்பந்தம் நிறைவு செய்யப்படுகிறது.
தற்போது அது கிடைக்காததால், 100 ரூபாய் முத்திரைத்தாள்களை, 120 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. பத்திர பதிவிலும் மந்த நிலை நீடிக்கிறது.
எனவே 20, 50 ரூபாய் முத்திரை தாள்கள் எளிதாக கிடைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

