/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து துவங்கியது
/
கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து துவங்கியது
ADDED : ஜன 07, 2026 06:08 AM

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து துவங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, கோயம்பேடு சந்தைக்கு, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் கரும்புகள் வர துவங்கியுள்ளது.
நேற்று ஏழு லாரிகளில் கரும்புகள் வந்தன. இதில், 18 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு, 400 ரூபாய் முதல்- 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குப்பையில் சாமந்தி பூ
பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் இல்லாத நிலையில், பூக்கள் விற்பனை சரிந்து, விலை குறைந்துள்ளது. இதில், சாமந்தி பூ கிலோ 20 - 30 ரூபாய்க்கு விற்பனையானது. இருந்தும் வரத்து அதிகரிப்பால், விற்பனையின்றி தேங்கி கிலோ கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டன.

