/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி வெற்றி
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி வெற்றி
மாவட்ட கிரிக்கெட் போட்டி எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி வெற்றி
மாவட்ட கிரிக்கெட் போட்டி எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி வெற்றி
ADDED : ஜன 07, 2026 06:16 AM
சென்னை: சி.எஸ்.கே., - திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் சார்பில், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள், ஆவடியை அடுத்த பட்டாபிராமில் நடக்கின்றன.
இதில் நேற்று நடந்த போட்டியில், வேலம்மாள் மேல் அயனம்பாக்கம், கொரட்டூர் பக்தவத்சல ம் வித்யாஷ்ரம் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த, கொரட்டூர் பக்தவத்சலம் வித்யாஷ்ரம் அணி 24.2 ஓவர்களில் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்து களமிறங்கிய வேலம்மாள் மேல் அயனம்பாக்கம் அணி, 11.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களை அடித்து வெற்றியை உறுதி செய்தது.
அதேபோல, முகப்பேர் டி.ஏ.டி., அணி மற்றும் எஸ்.பி.ஓ. ஏ., ஜூனியர் பள்ளி அணிகளுக்கு இடையிலான போட்டியில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த, முகப்பேர் டி.ஏ.டி., அணி, 29.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 139 ரன்கள் அடித்தது. இலக்கை துரத்திய எஸ்.பி.ஓ.ஏ., ஜூனியர் பள்ளி அணி 18.1 ஓவர்களில், விக்கெட் இழப்பே இல்லாமல் 140 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
போ ட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

