/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவள்ளூர் பள்ளி கிரிக்கெட் எபினேசர் அணி அபாரம்
/
திருவள்ளூர் பள்ளி கிரிக்கெட் எபினேசர் அணி அபாரம்
திருவள்ளூர் பள்ளி கிரிக்கெட் எபினேசர் அணி அபாரம்
திருவள்ளூர் பள்ளி கிரிக்கெட் எபினேசர் அணி அபாரம்
ADDED : ஜன 07, 2026 06:16 AM
சென்னை: திருவள்ளூர் பள்ளி கிரிக்கெட் போட்டியில் எபினேசர் பள்ளி அணி, 451 ரன்கள் வித்தியாசத்தில், திருநின்றவூர் செயின்ட் ஜான்ஸ் பள்ளியை தோற்கடித்து, அபார வெற்றியை பதிவு செய்தது.
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் பட்டாபிராமில் துவங்கியது. நான்கு குழுக்களாக பிரித்து, போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில், 'எச்' குழுவில் மோதிய கொரட்டூர் எபினேசர் பள்ளி அணி, 30 ஓவர்களில், நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு, 466 ரன்களை குவித்தது.
அடுத்து விளையாடிய செயின்ட் ஜான்ஸ் பள்ளி, 11.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 15 ரன்களில் சுருண்டது.
இதனால், 451 ரன்கள் வித்தியாசத்தில், எபினேசர் பள்ளி வெற்றி பெற்றது.
மற்றொரு பிரிவில், வேலம்மாள் வித்யாலயா பள்ளி அணி, 30 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 81 ரன்கள் அடித்தது.
எதிர்த்து விளையாடிய வேலம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி, 9.5 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்பிற்கு, 82 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

